Sunday 25 August 2013

பற்றி எரியும் பாலைவனம்

 

செப்டம்பர் மாதம் வரவிருக்கும் கேப்டன் ப்ரின்ஸ் (பெர்னார்ட் ப்ரின்ஸ்) கதைகளை விரும்பி படித்தவன் நான். இதுவரையில் ஒரு கதையை கூட நான் மிஸ் செய்ததே கிடையாது. நெடுநாளாக இந்த கதைகளை வெளியிடுவீர்கள் என்று காத்திருந்தேன். இப்போதுதான் அதற்க்கான நேரம் வந்துள்ளது.

தாமதம் தான் என்றாலும் அமிர்தம் எப்போது கிடைத்தாலும் அது அமிர்தம் தானேயன்றி வேறில்லை அல்லவா? அந்த வகையில் மிக்க மகிழ்ச்சி.

// உங்களில் எவரேனும் இந்தக் கதைகளை முதன்முறையாகப் படிக்கவிருக்கும் பட்சத்தில், உங்களுக்கொரு அட்டகாச அனுபவம் காத்துள்ளது என்பதை உறுதியாய்ச் சொல்லிடுவேன் !சாணித்தாளில், black & white -ல் படித்தே போதே அற்புதமாய்த் தென்பட்ட கதைகளை இன்று வண்ணத்தில், பெரிய சைசில் ரசிப்பது ஒரு போனஸ் என்று சொல்லலாம் !

இந்த இதழின் ஒரிஜினல்கள் உங்களில் எத்தனை பேரிடம் இன்னமும் உள்ளது ? ; //

இந்த இதழின் முதல் பிரதிகள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன. அவற்றை பைண்டிங் செய்து விட்டதால் இன்னமும் பத்திரமாகவே இருக்கின்றன. அந்த இதழ்களை பற்றி எவ்வளவு சொன்னாலும் அவை குறைவாகவே தெரியும்.

Patri yeriyum palaivanam

பற்றி எரியும் பாலைவனம்: ஆப்பிரிக்காவின் கடலோர நகரம் ஒன்றிற்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அத்த்யாவசிய மருந்துகளை கொண்டு சேர்க்க விரும்புகிறார் தன்னார்வ தொண்டர் ஒருவர். பெர்குசன் என்பது அவரது பெயர்.

யாருமே மேற்கொள்ள தயங்கும் இந்த நல்லெண்ண பயணத்திற்கு வழக்கம் போல கேப்டன் ப்ரின்ஸ் ஒத்துக்கொள்கிறார். அவருடைய குழுவினருடன் பெர்குசனும் பயணம் செய்து இலக்கை அடைகின்றனர். அப்போது நடக்கும் ஒரு சிறு சம்பவத்தால் பெர்குசன் சுகவீனம் அடைய, மருந்துகளை ஒரு ஒட்டகத்தின் மேலே ஏற்றிக்கொண்டு பார்னே மட்டும் தனியாக பாலைவனத்தில் கிளம்புகிறார்.

அவர் கிளம்பியவுடன் முழித்துக்கொள்ளும் பெர்குசன், அந்த மருந்துகளில் சிலவற்றை போதைக்காகவும் பயன்படுத்தலாம் என்றும், இந்த மருந்து சப்ளை வருவதை அங்குள்ள பயங்கரமான கொள்ளையர் கும்பலுக்கு தெரியும் என்றும் அவர்கள் பார்னேவை கொன்றுவிட்டு அந்த மருந்துகளை கைப்பற்றுவார்கள் என்றும் அபாய சங்கை முழங்குகிறார்.

நண்பன் ஆபத்தில் இருப்பதை தாமதமாக அறியும் ப்ரின்ஸ் உடனடியாக பார்னேவை காப்பாற்ற துடிக்கிறான். ஆனால் கப்பலை அப்படியே விட்டுவிட்டு செல்லவும் முடியாது. பெர்குசனும் இன்னமும் முழுமையாக குணமடையவில்லை. ஆகவே பொடியன் ஜின்னை அவருக்கு துணையாக விட்டுவிட்டு, கப்பலை ஒரு மறைவிடமான இடத்தில் நிறுத்தி (நோ பார்க்கிங் ஏரியாவில் என்று வைத்துக்கொள்ளுங்களேன்) விட்டு பாலவனதிர்க்கு விரைகிறான்.

இதற்க்கு மேலே என்ன நடந்தது என்பதை நான் இப்போதைக்கு சொல்லப்போவதில்லை. ஆனால் வழக்கமான ப்ரின்ஸ் கதைகளுக்கேயுரிய இடியாப்ப சிக்கல் கொண்ட சூழலும் இந்த கதையின் க்ளைமேக்ஸில் வருகிறது. என்ன நடந்தது என்பதை ஒரு பத்து நாள் பொறுத்திருந்து படித்து பாருங்கள்.

Page 1

இந்த கதையின்  ஹைலைட் என்று நான் கருதுவதே ஒட்டகத்திற்கும் பார்னேவுக்கும் இடையேயான நட்புதான். அதை தாண்டி கடைசி கட்டங்களில் அந்த ரவுத்திரமான பாலைவன காட்சிகளை ஓவியர் ஹெர்மான் வரைந்துள்ள விதம் கண்டிப்பாக நம்மை மதி மயங்க வைக்கும். கருப்பு வெள்ளையில் படித்தே காதல் கொண்ட நாங்கள் கலரில் கண்டால் என்ன செய்வோம் எனது தெரியாமல் காத்திருக்கிறோம்.

பாய்சன் கிடைத்தாலே அதை பாயாசம் கிடைத்தது போல சாப்பிடுவோம், இப்போது பாயாசமே கிடைக்கிறது. விடுவோமா என்ன?

1 comment:

  1. //பாய்சன் கிடைத்தாலே அதை பாயாசம் கிடைத்தது போல சாப்பிடுவோம், இப்போது பாயாசமே கிடைக்கிறது. விடுவோமா என்ன?//

    :)

    ReplyDelete