Monday 5 August 2013

ஆகஸ்ட் 2013 மாத காமிக்ஸ் இதழ்கள்

இன்றுதான் புத்தகங்கள் வந்தது. இரண்டு புத்தகமும் நன்றாகவே இருந்தது. சுட்டி லக்கியின் சன்ஷைன் புத்தகம் சென்டர் பின் அடிக்கப்பட்டு வந்தது பழைய நினைவுகளை கிளறி விட்டது (ராணி காமிக்ஸ் ஆரம்ப கால புத்தகங்கள், முத்து காமிக்ஸில் வந்த ஒரு ருபாய் - மாதமிருமுறை புத்தகங்கள்).



இதுவரை எடிட்டரின் தளத்திலோ அல்லது வேறு எங்குமோ சைலண்ட் மோடில் மட்டுமே இந்த தளத்தை வாசித்து வந்த நான் முதன் முறையாக ஒரு கமெண்ட் இடும் அளவிற்கு வந்துள்ளேன் அதற்க்கு முழு முதல் காரணம் க்ரீன் மேனர் கதைகளே.


வானவில்லுக்கு ஏழு வண்ணங்களும் இருந்தாலே அதனை ரசிக்க முடியும். வெறும் சண்டை நிறைந்த கௌ பாய் கதைகளோ, உளவாளிகள் நிறைந்த மர்மக் கதைகளோ, சிரிப்பை தூண்டும் நகைச்சுவை கதைகளோ, உண்மையை சம்மட்டியால் அடிக்கும் க்ராபிக் நாவல்களோ நமது காமிக்ஸ் புத்தகங்களை முழுமை செய்யவில்லை.


மனதில் மிருகம் வேண்டும் போன்ற அசாதாரண களத்தை கொண்ட கதைகளே நமது வாசிப்பு திறனை மேம்படுத்துகிறது. ஒரு சிறந்த கதாசிரியர் / எடிட்டர் / வெளியீட்டாளர் ஹிட் ஆன கதை வரிசைகளையே தொடராமல் வித்தியாசமான கதைகளை வெளியிட்டு வாசகர்களின் ரசனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பலரும் தயங்கும் வேளையில் நீங்கள் அதனை துணிந்து செயல்படுத்தி இருக்கிறீர்கள். அதற்காகவே உங்களுக்கு என்னுடைய மரியாதை கலந்த வணக்கம்.

இந்த கதை தற்போதைய இலக்கிய சூழலில் பின் நவீனத்துவம் என்று சிலாகித்து பேசப்படும் படைப்புகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல. தயவு செய்து இந்த புத்தகத்தை மற்ற வெகுஜன பத்திரிக்கைகளின் புதிய வரவு பகுதியில் இடம் பெற செய்யுங்கள். குமுதம் ஆனந்த விகடன், இந்தியா டுடே போன்ற இதழ்களில் புதிய புத்தக அறிமுகம் செய்யப்படுகின்றது. புத்தகத்தின் 2/5 காப்பிகளை அனுப்பினால் அவர்கள் அதனை அறிமுகம் செய்வார்கள். இதன்மூலம் காமிக்ஸ் மறுபடியும் வருகிறது எனது தெரிய வருவதோடில்லாமல் ஒரு சிறிய விளம்பரமும் செய்தது போல இருக்கும்

8 comments:

  1. அருமையான முதல் பதிவு

    தொடர்ந்து காமிக்ஸ் குறித்து பதிவிட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு ... தொடர்ந்து எழுதுங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திருப்பூர் ப்ளூபெர்ரி அவர்களே

      Delete
  3. அருமையான காமிக்ஸ் குறித்து முதல் பதிவு.வாழ்த்துக்கள்.
    C.RAAJA.THE COMICS LOVER

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜா சார்.

      உங்கள் பெயரும் அதற்க்கான காரணமும் அசத்துகிறது.

      இன்னமும் மாயவரத்தில் தான் இருக்கிறீர்களா?

      Delete
  4. //இந்த புத்தகத்தை மற்ற வெகுஜன பத்திரிக்கைகளின் புதிய வரவு பகுதியில் இடம் பெற செய்யுங்கள். குமுதம் ஆனந்த விகடன், இந்தியா டுடே போன்ற இதழ்களில் புதிய புத்தக அறிமுகம் செய்யப்படுகின்றது. புத்தகத்தின் 2/5 காப்பிகளை அனுப்பினால் அவர்கள் அதனை அறிமுகம் செய்வார்கள். இதன்மூலம் காமிக்ஸ் மறுபடியும் வருகிறது எனது தெரிய வருவதோடில்லாமல் ஒரு சிறிய விளம்பரமும் செய்தது போல இருக்கும்//

    GOOD IDEA!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி காமிக்ஸ் பிரியன் அமர்நாத்

      Delete